நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று கல்பாசியை நமது உணவில் சேர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
கல்பாசியை நமது உணவில் சேர்த்துக் கொள்வதனால் செரிமானம் மலச்சிக்கல் வாய்வு பிரச்சனைகள் சரியாகும். உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் அதிலிருந்து விடுபட இந்த கல்பாசி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தசை வலி பிரச்சனையை சரி செய்யவும் இந்த கல்பாசி முக்கியமாக உதவுகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும் இது உதவுகிறது.
நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கல்லீரல் பாதிப்புகளில் இருந்து தடுக்கவும் இது ஒரு சரியான தீர்வாக அமையும். நமது ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட செய்யும் இந்த கல்பாசி. ஆகையால் இத்தனை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய கல்பாசியை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்து வைப்போம்.




