பெண்களுக்கு முக்கியமாக இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வும் முடியின் நீளம் கம்மியாக இருப்பதும் தான். இதற்கு காரணம் நமது உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான். இன்று இந்த பதிவில் முடியை எப்படி எளிதில் நீளமாக மாற்றுவது என்று தெளிவாக காண்போம்.
ஐந்து பெரு நெல்லிக்காயை குட்டி குட்டியாக வெட்டி விதைகளை நீக்கி வெயிலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். அதன்பின்பு ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை சிறிது தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள்.
என்னை சூடாகிய பின்பு அரைத்து வைத்திருக்கும் கரிசலாங்கண்ணி பேஸ்ட் பெரு நெல்லிக்காய் பொடி அரைக்கப் மருதாணி பூ ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும். இந்த பொருட்களின் சாறு நன்கு எண்ணெயில் கலந்த பின்பு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி தினமும் உபயோகித்துக் கொள்ளுங்கள்.




