இத செஞ்சா போதும்..!! உங்க போன் பேட்டரி பாதுகாப்பா இருக்கும்..!!

ஸ்மார்ட் ஃபோன்களில் அதிகம் சர்வீஸ் செய்யப்படும் பொருள் பேட்டரி தான். இதை உரிய முறையில் பாதுகாப்பது அவசியம்.  இதற்கு சில சிம்பிள் டிப்ஸ் பாலோ செய்தாலே போதும். 

1. 80% மேல் சார்ஜ் செய்ய கூடாது

ஸ்மார்ட் போனை  நீண்ட நேரம் முழுமையாக சார்ஜ் செய்வது பேட்டரியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யவே பரிந்துரைக்கப்படுகிறது. iphone மற்றும் Asus போன்ற சில ஸ்மார்ட் போன்களில் பேட்டரி 80% சார்ஜ் ஆனதும் தானாகவே சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்ளும் வகையில் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

2. 20% கொண்டு வரக்கூடாது

உங்கள் ஸ்மார்ட்போனை 100% சார்ஜ் செய்வது மட்டுமின்றி முழுமையாக டிஸ்சார்ஜ் செய்வதும் அதாவது 20% குறைவான சார்ஜ் கொண்டிருப்பதும் பேட்டரியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.  எப்போதும் சராசரி ஸ்மார்ட்போன் பேட்டரி அளவை பராமரிக்க வேண்டும்.

 3. தரமான சார்ஜரை பயன்படுத்த வேண்டும்

ஸ்மார்ட் போன் உடன் வரும் சார்ஜரையே பயன்படுத்த எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.  இருப்பினும் போன் வாங்கும் போது சார்ஜர் கொடுக்கப்படவில்லை என்றால் நல்ல தரமான நிறுவனத்தின் சார்ஜரை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சரியான அளவில் மின்சாரம் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை பெற முடியும்.

4. ஓவர் ஹீட்டிங் செய்யக்கூடாது

ஓவர் ஹீட்டிங் பேட்டரி ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் கேம் விளையாடுகிறீர்கள் என்றால் போன் கூலிங் செய்ய உங்கள் போன் கேஷ் கவரை அகற்ற வேண்டும். அதேபோல் போன் ஓவர்ஹீட்டிங் ஆனால் குளிர்ச்சி அடையும் வரை பயன்படுத்த வேண்டாம்.

5. சாப்ட்வேர்  அப்டேட் செய்ய வேண்டும்

சிறந்த பேட்டரி ஆயிலை அனுபவிக்க உங்கள் ஸ்மார்ட் போனை சமீபத்திய வர்ஷனுக்கு சாப்ட்வேர் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சாப்ட்வேர் அப்டேட் உங்கள் பேட்டரி ஹெல்த்தை மேம்படுத்த உதவும். எப்போதும் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யும் முன் உங்கள் பேட்டரி 50% மேல் சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Read Previous

குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி..!!

Read Next

இளைஞர்களே!! இது உங்களுக்கு தான்..!ஜூலை 23 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular