நீங்கள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த காய்கறி சாலட் சாப்பிட்டு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மாற்றங்களும் புத்துணவுகளும் கிடைக்கும்..
வெள்ளை பூசணி சுரைக்காய் பீக்கங்காய் தக்காளி, கேரட் முள்ளங்கி முட்டைக்கோஸ் வெங்காயம் போன்ற காய்கறிகளை சாலட் தயாரிக்க பயன்படுத்தலாம், இவற்றுடன் சிறிய உப்பு மிளகு தூள் தேவைப்பட்டால் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிண்ணம் அளவுக்கு சாப்பிடலாம், மேலும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை புதினா இலைகளை தூவி முளைகட்டிய பாசிப்பயிறு நிலக்கடலை பருப்பு சேர்த்து காலை நேர உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம், குழந்தைகளுக்கு உணவு வேலைக்கு நடுவே சாலட் வகை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும், ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அளவில் கொடுத்து பழக்கி சாப்பிட வைக்க வேண்டும், பழகிய பிறகு தினமும் சாப்பிட வைப்பது நல்லது இந்த கலவையை சாப்பிடுபவர்கள் பெரியவர் மற்றும் குழந்தைகள் சுறுசுறுப்புடனும் புத்துணர்களுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள்..!!




