தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் வலம் வருபவர் கமலஹாசன். இவரின் நடிப்பு திறமையால் இவரை உலகநாயகன் என்று போற்றப்படுகிறார். இவர் சங்கரின் இயக்கத்தில் நடித்த “இந்தியன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது- இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
“இந்தியன் 2” திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. திரைப்பிரபலம் என பலரும் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதேசமயம் நடிகர் பாபி சிம்மா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்பொழுது அவர் பேசுகையில் “உலக நாயகனை பற்றி உலகுக்கு தெரியும். பிரம்மாண்டமான திரைப்படம் தற்பொழுது வந்துள்ளது ‘இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படத்தை கட்டாயம் திரையில் அனைவரும் பார்க்க வேண்டும். வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்கில் காண தவறாதீர்கள்.
‘தடை உடை’, ‘நான் வயலன்ஸ்’.‘சலார்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து நான் நடிக்க உள்ளேன். ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பதை எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் மிகப்பெரிய படத்தில் நான் ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளேன் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இப்படியான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. எனக்கு கிடைத்திருக்கிறது பெருமையாக உள்ளது .
இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமல் சாருடன் நான் நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கோபத்தால் நான் நிறைய அனுபவம் அடைந்து விட்டேன். தற்போது எனது கோபம் அனைத்தையும் அடக்க கற்றுக் கொண்டுள்ளேன். இனி வேறொரு சிம்ஹாவை நீங்கள் பார்ப்பீர்கள். கார்த்திக் சுப்புராஜ் எனது நண்பர். அவருக்கு யார் தேவை இல்லை என்பது தெரியும்”, என்று கூறியுள்ளார்.
இதன் வாயிலாக பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார் 2” திரைப்படம் விரைவில் தொடங்கி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த அப்டேட் கொடுத்த பாபி சிம்ஹாவை பிரபாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.