இந்தியன் 2 உடன் மோதும் கங்குவா..!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் தற்போது உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் (ஏப். 14ஆம் தேதி) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 68’ படமும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என தெரிகிறது.

Read Previous

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது..!!

Read Next

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular