தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 20 கோடி என சொல்லப்படுகிறது. இந்தியன் 2, முதல் நாளில் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தற்போது கலப்பட ரிவியூ பெற்று வருகிறது.