
இந்தியாவின் அரசு ஏற்றுமதி தடையின் எதிரொலி.. அரிசியை வாங்கி குவிக்கும் மக்கள். கட்டுப்பாடு விதித்த நாடுகள்.
எல் நினோ பருவகால மாற்றத்தின் காரணத்தால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகின்றது. இதனால் அரசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தியா.
இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் மக்கள் வழக்கமாக வாங்கும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக அரிசியை வாங்க துவங்கியுள்ளனர்.
இதனால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசி தான் என்று கடை உரிமையாளர்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மேலும் இந்த அரசி விற்பனையை பயன் படுத்தி சில கடைகளில் அரிசி விலையை அதிகரித்தும் உள்ளனர்.
தொடர்ந்து இது போன்ற அரிசி விற்பனை நடந்து வருவது சில நாட்களிலேயே அரிசி பற்றாக்குறையை உருவாக்கும் என இந்திய உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.