ஆதிகாலத்தில் இருந்து காலராவுக்கு தடுப்பு மருந்து இல்லாததால் மக்கள் பலரும் அவதிப்பட்டு வந்தனர் இந்த நிலையில் தற்போது கலராவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது..
காலராவை தடுப்பதற்கான ஹில்கால் என்ற மருந்தினை பாரத் பயோடேக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் காலரா நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்வழி தடுப்பூசியை இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது, மூன்றாம் கட்ட பரிசுத்தமைக்கு பின்பு இந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக அந்த ஆராய்ச்சியின் தகவல் வெளிவந்துள்ளது, பாரத் பயோடெக் நிறுவனம் தனது ஹைதராபாத் ஆலையிலிருந்து 4.5 கோடி திறன் கொண்ட டோஸ் உற்பத்தி திறனை தொடங்கி இருக்கிறது என்றும், 14 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டு டோஸ்களும் போடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது, இனிவரும் காலங்களில் காலரா நோய்களுக்கு எதிராக போராடக்கூடிய வாய்வழி டோஸ் (வாய் வழி தடுப்பூசி) நடைமுறைக்கு வர இருப்பதாகவும் இதனால் இந்தியா மற்றும் உலகமெல்லாம் வாழும் மக்களுக்கு இந்த சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளது..!!