இந்தியாவில் 4000யை தாண்டிய கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 4000யை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பாதிப்பு:

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 412 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 293 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4170ஆக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 53,3337. இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44472153 ஆகும்.

Read Previous

இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்.. திகைத்துப்போன ரசிகர்கள்..!!

Read Next

மின்கட்டணத்தை அதிரடியாக குறைத்த மின்வாரியம் – நுகர்வோருக்கு குட் நியூஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular