ஐசிசி சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தற்போது 9 வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இந்த 9வது சீசனானது வரும் அக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெற உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் நிலை வரும் நிலையில், அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றப்படும் தேவை ஏற்பட்டால் இந்தியா முதன்மையான தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. வங்கதேச சூழலை ஐசிசி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.