உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.
ஆனாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் (62.82%) இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் இறுதி ஆட்டத்தில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




