
இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி கொண்டு வருகின்றது. இதில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கார்த்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கி ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 22.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி 300 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்ந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. இறுதியாக ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியின் சிறப்பாக விளையாட மிட்செல் மார்க்ஸ் 65 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகம்மது ஷாமி மற்றும் முகமது சிராஜ் தலா மூன்று விக்கெட்டுகளுடன், சடேஜா இரண்டு விக்கெட் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தல ஒருவிக்கட்டும் வீழ்த்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்க உள்ளது.