
சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, மற்றொரு போருக்கு தயாராக உள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. ஹைதராபாத் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதே வேகத்தில் தொடரை கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது. இன்றைய ஆட்டம் ராய்பூர் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.