இந்திய ஆடவர் அணியானது, சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி T20 உலகக்கோப்பை தொடரை வென்று அசத்தியது. இந்த நிலையில் இந்திய அணி, புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அதைப்பற்றி முழு விவரம் தெரியவந்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இம்மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார் என BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என அவர் கூறியுள்ளார்.