
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரங் கங்குலிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து..!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரங் கங்குலி இன்று (ஜூலை 8) தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது. பிரபல சமூகவலைதளமான எக்ஸ் பக்கத்தில் #HappyBirthdayDada #HBDSouravGanguly #HBDDada போன்ற ஹேஷ்டேக்குகள் டிரண்ட் செய்யப்பட்டு வருகின்றன. கங்குலி கிரிக்கெட்டில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்று விட்டாலும் அவரின் மாஸ் இன்னும் குறையவில்லை.