இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை வீரமங்கை சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறும் திருப்புமுனையும்..!!

இந்திய சுதந்திர போராட்ட வீரங்கனை கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்தநாள் (பிப்ரவரி 13) …

இவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.

சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி அறிய தொடர்ந்துப் படிக்கவும்.

சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் சரோஜினி நாயுடு, இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879 அன்று பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார்.

இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோரநாத் சட்டோபத்யாயா. இவரது தாய் வரதா சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார்.

*இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு*

1905ல், வங்க பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார்.

பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய பெண்களுக்கான சுயமரியாதையை, அவர்களுக்குள் மீண்டும் கொண்டு வந்தார்.

*சரோஜினி ஆற்றிய பணிகள்*

சரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்’ சட்டமான ‘ரௌலெட் சட்டத்தினைப்’ பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.

1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.

சரோஜினி நாயுடு அவர்கள், 1925ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.

1925ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல், நடந்த “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார்.

காந்திஜி நேரு போன்ற தலைவர்களுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.

ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.

சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
சரோஜினி நாயுடு அவர்கள் புகழ் வாழ்க..!!

Read Previous

வாழ்வின் சிந்தனைகள் ஆயிரம் அவற்றை அறிந்தால் அனுபவங்கள் பல்லாயிரம் : படித்ததில் பிடித்தது..!!

Read Next

மதிய நேரத்தில் தூங்குபவர்கள் நீங்கள்…!! அப்போ மதிய நேரத்தில் தூங்குவதால் ஏற்படும் நோயைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular