இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது விரைவு கடன் வழங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது அதன்படி அந்த கடனை எப்படி வாங்குவது என்பதையும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது..
இந்திய ரிசர்வ் வங்கி கடன் வசதிகளை அணுகுவதற்கு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது,UPI போன்ற யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் என்ற இணைப்பை (ஆர்பி)ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் சிறிய மற்றும் கிராமப்புற மக்கள் உடனடியாக கடன் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும்,ULI இயங்கு தளத்தின் மூலம் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவலை உடனடியாக டிஜிட்டல் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிலையில் கடன்களை விரைவாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ ஆளுநர் தாஸ் கூறியுள்ளார், திட்டம் கடந்த ஆண்டு சோதனை மூலம் இரண்டு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்..!!