இந்திய வருமான வரித்துறை அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Stenographer Grade I பணிக்கான காலியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Stenographer Grade I பணி-57.
கல்வி தகுதி:
Stenographer Grade – I பதவிகளில் இருந்தவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 56.
ஊதிய விவரம்:
ரூ.35,400 to ரூ.1,12,400 மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




