சிறுநீரகம் நமது உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றி ஹார்மோன்களை ஒழுங்கு படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது. இது சரியாக வேலை செய்யவில்லை என்றால் சிறுநீரக நோய் உருவாகும். சிறுநீரகங்களில் இருக்கும் pH மற்றும் பொட்டாசியம் அளவை கட்டுப்படுத்துகின்றன.
நமது எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும் தசை சுருக்கத்தை கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவுகிறது. சிறுநீரக நோய் இருந்தால் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
சிவப்பு குடைமிளகாய்: பொட்டாசியம் மாங்கனிஸ் வைட்டமின் சி வைட்டமின் பி6 ஆகியவற்றை கொடுக்கிறது. இதில் நார் சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது.
வெங்காயம்: உப்பில்லாமல் சுவை சேர்ப்பதற்காக வெங்காயம் மிகவும் உதவுகிறது. பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உப்புக்கு மாற்றாக இருக்கும்.
ஆப்பிள்: ஆப்பிளின் பொட்டாசியம் பாஸ்பரஸ் சோடியம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணத்தினால் சிறுநீரகத்திற்கு ஏற்ற தேர்வாகும். இதை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்து கிடைக்கும்.




