பொதுவாக காலை உணவுக்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமான ஒன்றாகும்…
காலையில் தேவையில்லாத உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியை பெறலாம். உடலின் ஆரோக்கியம் காலையில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதிலிருந்து துவங்குகிறது இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல் காலையில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் அல்லது குடிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவை அன்றைய தினம் முழுவதும் வேலைகளை சிறப்பாக செய்ய உதவுகிறது. காலை உணவுகளை தவிர்க்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..
மேலும் காலை நேரத்தில் பூரி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சோர்வடைந்து காணப்படும் மேலும் மத மதவென்று மந்த தன்மையில் இருக்கும்.
வாழைப்பழங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அதிக சத்துள்ள பலமாக இருந்தாலும் அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது சிறந்த தேர்வாக இருக்காது.
அதேபோல் காலை வேளையில் உணவில் கணிசமான அளவு காரமான பொருட்களை சேர்ப்பதும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். மிளகாய் மற்றும் மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகள் வயிற்றுப் பகுதியை எரிச்சல் அடைய செய்யலாம் மேலும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அவை செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் மேலும் நெஞ்செரிச்சலும் ஏற்படும்..
பூரி அல்லது பலவிதமான சிற்றுண்டிகள் கொண்ட வருத்த பொருட்களுடன் உங்கள் நாளை தொடங்குவது கவர்ச்சிகரமானதாக தோன்றலாம் இருப்பினும் இந்த உணவில் அதிக எண்ணெய் மட்டும் கொழுப்பு நிறைந்துள்ளது. மேலும் இதுபோன்ற உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்பட்டு நாள் முழுவதும் மந்தமாக இருக்கும்..
சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச்சாறுடன் உங்கள் காலை உணவை தொடங்குவது பரிந்துரைக்கப்படாத மற்றொரு நடைமுறையாகும். அவை புத்திரன் சூடுதாகவும் வைட்டமின் சி நிரம்பியதாகவும் இருந்தாலும் அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது அமில பிரச்சனைகளை தூண்டும்..!!