• September 29, 2023

இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா?..!தொழிலதிபருக்கு குவியும் பாராட்டுகள்..!!

  • பக்தி பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொழிலாளிகள் வாங்கிய கடனை எழுதி வைத்த நோட்டை தீயில் போட்டு எரித்த சவுதி அரேபியைச் சேர்ந்த தொழிலதிபர் சலீம் பின் ஃபத்கான் அல் ரஷிதி.

சவுதி அரேபியாவை சேர்ந்த தொழிலதிபர் சலீம் பின் ஃபத்கான் அல் ரஷிதி சில புத்தகங்களை போட்டு எரிக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது என்ன புத்தகம் என்றால் அவரிடம் ஏராளமானோர் கடன் வாங்கி உள்ளனர்.

அவர்கள் பற்றிய விபரங்களை அந்த புத்தகத்தில் அந்த தொழில் அதிபர் எழுதி வைத்து உள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத் அல் அதாவின் பத்தாவது நாளில் நற்செயல் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னிடம் கடன் வாங்கியவர்கள் பற்றிய விபரங்களை தீயில் போட்டு எரித்து தன் மதத்தின் நன்மைக்காக கடனாளிகளை மன்னித்து விட்டதாக கூறுகிறார்.

இந்த காணொளியை மில்லியன் கணக்கானோர் பார்த்து தொழிலதிபர் சலீம் பின் ஃபத்கான் அல் ரஷிதி-க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இந்த வழியில் செல்லும் ரயில்கள் நிறுத்தம்..! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

Read Next

BREAKING: நாளை 5 மாவங்களில் பள்ளிகள் விடுமுறை..!எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular