இந்த குணங்களை கொண்டிருந்தால் நீங்கள் அதிபுத்திசாலி தான்…!!

சராசரி மனிதர்களை விட கூடுதல் புத்திசாலித்தனம் உடையவர்கள் தனித்துவமான சில பண்புகளை வெளிப்படுத்துகிறார்கள் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்…

அதிக ஆர்வம் ; புதுப்புது விஷயங்களை கற்று தெரிவதில் அவர்கள் காட்டும் ஆர்வம் பிரமிக்க வைத்திருக்கும் பலவகையில் கேள்விகளை கேட்டு தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்…

சூழ்நிலைக்கு ஏற்பவாறு தன்னை மாற்றிக்கொள்ளுதல் : எந்தவிதமான சூழலுக்கும் தன்னைப் பொருந்துமாறு மாற்றிக் கொண்டு வளைந்து கொடுக்கும் தன்மை உடையவராய் இருப்பது புத்திசாலிகளின் மற்றொரு சிறப்பு. சவால்களை வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களால் இயற்ற செயல்பட ஆரம்பிப்பார்கள்..

திறந்த மனதுடையவராய் இருப்பது : ஒரு பிரச்சனையை வெவ்வேறு கோணங்களில் அணுகவும் தேவைப்படும் போது தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கும் திறந்து மனது உடையவர்கள் அவர்..

உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைப்பது : புத்திசாலிகள் தங்கள் உணர்வுகளை சிறந்த முறையில் கையாள்வதில் வல்லவர்கள் பரிதாபத்திற்குரிய ஒரு இடம் பச்சாதாபம் காட்டி அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வார்கள்..

தன்னை அறியும் குணம் : புத்திசாலிகள் தங்கள் பலம் பலவீனம் என்ன ஓட்டம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள் இது அவர்களின் தொடர்பு வளர்ச்சிக்கு சிறந்த முறையில் உதவும்..

பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கும் திறன் கொண்டவர்கள் : புத்திசாலிகள் எந்த ஒரு பிரச்சினையாக இருப்பினும் அதன் தீவிரத்தை ஊடுருவி ஆராய்ந்து அதற்கு தகுந்த தீர்வு காண்பதில் திறமை கொண்டவராக இருப்பார்கள்…

நகைச்சுவை உணர்வு : புத்திசாலியிடம் உள்ள நகைச்சுவை உணர்வானது எந்தவிதமான சிக்கலையும் இடையூறையும் லேசாக எடுத்துக்கொண்டு அதை நேரடியாக அணுகுவதை தவிர்த்து மாற்று வழியில் சிந்திக்கவும் தகுந்த தீர்வை விரைவில் கண்டறியும் உதவும்..

பக்கச் சார்பற்ற பகுப்பாய்வு : அபாரமான புத்தி கூர்மை உள்ளவர்கள் சூழ்நிலைகளை பகுத்தறிந்து கற்கரீதியாக தகவல்களை மதிப்பீடு செய்து ஓரவஞ்சனை இல்லாமல் உண்மைக்கு சாதகமாக முடிவுகளை எடுப்பார்கள் ஒருபோதும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விட மாட்டார்கள்..!!

Read Previous

ரோஜா இதழ்களின் மருத்துவ குணங்கள் இதய நோய் முதல் சரும பிரச்சனை வரை தீர்வு..!!

Read Next

நீங்கள் யார் என்று அறிவதற்கு உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் உண்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular