
அன்றைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர் ஒரு சிறந்த ராஜதந்திரி மற்றும் ஒரு தலை சிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் தான் ஆச்சரிய சாணக்கியர்..
வாழ்வில் வெற்றி அடைந்த பலருக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்ன என்று கூறியுள்ளார்..
முக்கிய குணங்கள் : சாணக்கியரின் கருத்துப்படி சிறந்த நிர்வாக திறமை கொண்ட பெண்கள் குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்கள். இந்த குணம் கொண்ட பெண்ணை மனைவியாக பெற்றவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என குறிப்பிட்டுள்ளார். எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை சரியாக முடிவு எடுக்கும் குணம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் தெளிந்த ஞானம் ஆகியவற்றை கொண்ட பெண்கள் எப்போதும் சிறந்த மனைவியாக இருப்பார்கள். இனிமையாகவும் அன்பாகவும் பேசும் தன்மை கொண்ட பெண்கள் கிடைப்பது வரம் என்கிறார் சாணக்கியர் இப்படிப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் கணவனுக்கு ஆறுதலாக இருப்பார்கள் இவர்களால் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் அன்பான ஆறுதலான மனைவியின் பேச்சு கணவனுக்கு மிகப்பெரும் வலிமையில் கொடுக்கும்.சாணக்கியரின் கருத்துப்படி நல்லொழுக்கம் மற்றும் விசுவாசம் மிக்க பெண்கள் சிறந்த மனைவியாகவும் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் இருப்பார்கள் இந்த குணம் கொண்ட பெண்கள் ஒருபோதும் குடும்பத்திற்கு அவமானம் சேர்க்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையான குணம் கொண்ட பெண்களை மனைவியாக பெற்றுவிட்டால் எல்லாவற்றையும் பெற்றதற்கு சமம் என்கிறார் சாணக்கியர்..!!