
இந்த கொளுத்தும் வெயிலில் ஐஸ் வாட்டரை தேடி தேடி குடிக்கிறீர்களா..!! அப்போ இதில் இருக்கும் ஆபத்தையும் தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த கோடை காலகட்டத்தில் அனைவரும் குளிர்ந்த நீரை குடிக்கத்தான் ஆசைப்படுவோம். வெயிலில் வெளியே சென்று வரும் பொழுது குளிர்ந்த நீரை குடிக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். இவ்வாறு குளிர்சாதன பெட்டிகளில் வைக்கும் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சீன மருத்துவ அறிவியல் நடத்தப்பட்டுள்ள அக்காடமி ஆய்வில் இவ்வாறு பிரிட்ஜில் இருக்கும் நீரை குடிப்பதால் மாரடைப்பு கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது. ஃப்ரிட்ஜில் இருக்கும் இந்த குளிர்ந்த நீரை குடிப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறையும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே ஃப்ரிட்ஜில் இருந்து குடிக்கும் நீருக்கு பதிலாக மண் பானைகளில் நீரை நிரப்பி மண்பானை நீரை குடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.