
நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். முதியோர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டும் என்பதால் தண்ணீர் குடிக்காமல் இருப்பாங்க ஆனால் வயதானவர்கள் அதிக தண்ணீர் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது. மேலும் சிறுநீர் கழிக்கும் வழியில் எந்த நோய்களும் ஏற்படாது .மேலும் தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் என்பதில்லை லெமன் ஜூஸ் காபி குளுக்கோஸ் கலந்த தண்ணீர் இப்படி குடிப்பதால் நம் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைக்குது. மேலும் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும் மேலும் தண்ணீர் சத்துள்ள வெள்ளரிக்காய் தர்பூசணி பழம் ஸ்ட்ராபெரி ஆகியவற்றை நாம் சாப்பிடலாம் .