இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் சொந்த வீடு கட்டுவது என்பது கற்பனை மிகுந்த கனவாகவே இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் சொந்த வீடு கட்ட வேண்டுமா இந்த கோவிலுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக நிஜமாகும் என்கிறார்கள்..
திருச்சி-துறையில் செல்லும் சாலையில் மணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோயில் உள்ளது, சிவனே இங்கு பூமிக்கு உரிய தெய்வமாக இருப்பதனால் மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகி நன்மை நடக்கும் என்று நம்புகின்றனர், கருவறையில் பூமிநாத சுவாமி லிங்கத் திருமேனியாக சாய்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார், இந்த கோவில் பூமிக்கு நன்மை தரும் வில்வம், வன்னி மரங்கள் தலை விருட்சமாக அமைந்துள்ளது, இந்த கோவிலில் பரிகார பூஜை செய்து வழிபட்டால் வீடு விற்பது மற்றும் வீடு சம்பந்தமான கடன் பிரச்சனை, வீடு கட்டுதல் போன்றவை விரைவில் நடக்கும் என்று நம்பப்படுகிறது..!!