இந்த சண்டே இறால் மசாலா குழம்பு இப்படி செய்து பாருங்க..!!

வாரம் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு சண்டே மட்டும் தான் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கின்றது.

அதனால் சண்டே ஏதாவது விஷேஷமா சமைக்க வேண்டும் என்று வேலைக்கு போகும் பெண்களும் வேலைக்கு போகும் கணவருக்காக இல்லதரசிகளும் நினைப்பது வழக்கம்.

அப்படி இந்த சண்டே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்:

இறால் – 500கிராம்

வெங்காயம் – 2

கடுகு, சோம்பு – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 1

தக்காளி – 3

மஞ்சள்- 1 கரண்டி

பட்டை – 2

மிளகாய்த்தூள் – 2 கரண்டி

மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சோம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவேண்டும்.

வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா மல்லித் தூள், சீரகத் தூள் என்பவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பிறகு தக்காளியை அரைத்து கொதிக்க வைத்த குழம்பில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு கொதிக்க விட்டு அதில் சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து  10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான இறால் குழம்பு தயார்.

Read Previous

Nellikkai Tea | உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் டீ செய்வது எப்படி?..

Read Next

மத்திய அரசில் 8,326 பணியிடங்கள்..!! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular