நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அப்படி இன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப் ஒன்றை எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம். இதில் ஆரோக்கியத்திற்காக காய்கறிகள் மற்றும் சிக்கனை சேர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – ஒன்று
காளான் – ஒரு கப்
சிக்கன் – கால் கிலோ
கேரட் – மூன்று
பீன்ஸ் – 3
முட்டைக்கோஸ் – சிறிய துண்டு
தனி மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் – தேவைக்கேற்ப
இஞ்சி,பூண்டு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
சிக்கனை எடுத்து நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பெருஞ்சீரகம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை கொரகொரப்பாக தட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் கொத்தமல்லி கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணை சேர்த்து அது உருகிய பின் தட்டி வைத்திருக்கும் பெருஞ்சீரகம் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை அதில் ஊற்றி காய்கறிகளை வேக விடவும். சிக்கனை அதில் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்து வதக்கவும். கடைசியாக காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்த பிறகு அதை இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சிக்கன் வெஜிடபிள் சூப் தயார்.




