நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் நம்மில் பல பேர் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது வழக்கமாகத்தான் இருக்கிறது. இந்த ஓட்ஸில் வைட்டமின்கள் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகச் சிறந்த மருந்தாக காணப்படுகிறது. இன்று இதை வைத்து தோசை எப்படி செய்யலாம் என்று தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 6 கப்
அரிசி மாவு – நான்கு கரண்டி
சோளமாவு – நான்கு கரண்டி
வெங்காயம் – இரண்டு
பச்சை மிளகாய் – 4
தயிர் – 4 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பச்சை மிளகாய் வெங்காயம் கொத்தமல்லியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். ஓட்ஸை எடுத்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். சீரகம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தயிர் அரிசி மாவு சோள மாவு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இதை ஒரு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். கடைசியாக அதனுடன் வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தோசை கல்லில் மாவை ஊற்றி தோசையை போல வெந்ததும் எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான ஓட்ஸ் தோசை தயார்.




