
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!
ஒரு டீ கடையில் நடந்தது
அப்பொழுது அங்கு வந்த பெரியவர். பசிக்குது 10 ரூபாய்க்கு வடை வாங்கி தர முடியுமா என்றார் கொஞ்சம் பரிதாபமான குரலில்!
நானும் வாங்கி குடுத்துட்டேன்… கஷ்டமா போச்சு! அதெப்படி பத்தும்… இன்னும் வாங்கிக்கங்கனேன்… இல்ல இப்ப பசி போனா போதும்னார்…
சரி கைல அம்பது ருவா குடுக்கலாம்னா… இல்ல இதுவே பெருசு… நன்றி தம்பி என்று சொல்லிட்டு … அந்த மூணு வடய கைல பொத்திவச்சு கொண்டு போனார்…
ஆள் பாக்க ஓரளவு நல்லாருந்தார்னாலும்… அந்த பசி அவர் உடம்புல தெரிஞ்சப்ப கூட அந்த 50 இருந்தா அடுத்த வேளைக்கு ஆகுமே னு யோசிக்காம…இப்பதைக்கு பசி போனா போதும்னு சொன்னதும்… இன்னும் கண்ணுலயே நிக்குது..
ஏதோ பெருசா தப்பு பண்ண உணர்வு.. இதேமாறி சிலவருசம் முன்னாடி நெல்லையில் நடந்திருக்கு.. நா குடுத்த 100 ரூவாய ஒரு பாட்டி ( மனநிலமில்லாத) தூக்கி போட்டது…
யாராச்சு பசிக்குதுன்னு கேட்டு எவ்வளவோ பண்ணிருந்தாலும் இங்க போட்டோ போட்டது இல்ல..
ஆனா இந்த மாறி நடக்கும்போது… இங்க பகிர்ந்து ஆற்றாமையக வெளிப்படுத்த தோணுது…
ஒருவேள அங்க நடுரோடாவோ… இல்ல வெளிய அவசரமா போக வேண்டிய சூழல் இல்லாம இருந்துருந்தா அவர நல்லா கவனிச்சுருக்கலாம்.. காச திணித்து அனுப்பிருக்கலாம்னு தோணுது…
தயவுசெய்து ரோட்ல பசிக்கு கை நீட்டுனா இல்லனு மட்டும் சொல்லாதீங்க… நீங்க எவ்ளோ பெரிய கார்ல போனாலும்… எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்…😞
அவர் நல்லாருக்கனும்…அவரோட எல்லா நேர பசியும் தீரனும்… இப்பதைக்கு இதான் மனசுல ஓடுது❤️
இந்த பசி எவ்ளோ கொடுரமானதுனு நானும் உணர்ந்திருக்கேன்😡