இந்தப் படத்தைப்
பார்த்ததும்,
பழைய ஞாபகம்
வருகிறது.
முன்பெல்லாம்
அசைவ உணவு என்றால்
வாரம் தவறாமல்
இருப்பது
நாட்டுக்கோழி முட்டைதான்.
வீடுகளில் இருக்கும்
தாளிப்பு இரும்புக்கரண்டியில்
ஊற்றிக் கொடுக்கிற
அடை முட்டைதான்.
அடுத்து
விருந்தினர் வந்தால்
நாட்டுக்கோழிக்
குழம்பு தான்.
ஆடி,
தீபாவளி,
பொங்கல்,
ஊர்ப்பொங்கல்
என்று வந்தால்த்தான்
வீட்டில் ஆட்டுக்கறி குழம்பு
கண்டிப்பாக உண்டு.
அதுவும்
நான்கைந்து பேர் சேர்ந்து
ஆட்டுக்குட்டி பிடித்து,
அதில் ஒருவர் வளர்ப்பார்.
அவருக்கு
வளர்ப்புக் கூலியாக
தலை,
கால்,
குடல் இருக்கும்.
மீதிக் கறியை
கூறுபோட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
அதை வாங்க
வீட்டிலிருந்து
சட்டிகளுடன் செல்லவேண்டும்..
எங்க வீட்டில்
ஆடு அறுத்தால்
முதலில்
அந்த
சுவரொட்டினய
வாங்கி
சுட்டுத் தின்பது தான்
முதல் வேலை.
ஆடு அறுப்பவர்க்கு
ஆட்டுத் தோல் தான்
சம்பளம்.
ஆனால்
இப்ப
தினமும்
ஆட்டுக்கறி கிடைக்கும்.
வீடுகளில்
வாரம் ஒரு முறை
உண்டு என்றாட்சி.
மொத்தத்தில்
ஆட்டுக்கறி
அளவோடு சாப்பிட்டால்
நல்லது.




