ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் சில பூஜை அறையில் எப்படி வேணாலும் பூஜை செய்யலாம் என்ற என்ற எண்ணத்துடன் என்றும் ஒரு சிலர் பூஜை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில பூஜை அறை குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூஜை அறையில் பூஜை செய்யும் இடத்தில் வெறும் தரையில் விளக்கை வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது ஒரு பித்தளை தட்டு அல்லது பஞ்சலோகத்தில் ஆன தட்டின் மீது வைத்து விளக்கேற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் அதிர்ஷ்டமும் நோய் இல்லாத வாழ்வும் அமையும். விளக்கு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது நெய் போன்றவற்றை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். குத்து விளக்காக இருந்தால் சிறு வாழை இலை விரித்து பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மேல் குத்துவிளக்கு வைத்து தீபம் ஏற்ற வேண்டும் இது மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஒரு சில பெண்கள் விளக்கேற்றி விட்டு பிறகு தலை சீவுவார்கள் அல்லது தலையை விரித்துப் போட்டுக் கொண்டே தலை சீவுவார்கள் அப்படியெல்லாம் வரும்பொழுதும் செய்து விடாதீர்கள். தலை சீவி குங்குமம் பொட்டு வைத்து முகத்தை மங்களகரமாக அலங்கரித்துக் கொண்டுதான் விளக்கேற்ற வேண்டும்.




