இந்த பொரியலை செய்து பாருங்கள்..!! அனைத்து சத்துகளும் நிறைந்த காராமணி காய் பொரியல்..!!

நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதை நாம் எப்போதும் செய்ய வேண்டும். ஆனால் அதிலிருந்து தவறுவதும் நமது வழக்கமாகத்தான் இருக்கிறது. நமது உடலுக்கு புரதம் நார் சத்து வைட்டமின்கள் போலிக் அமிலம் போன்ற நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகமாக கொடுப்பதற்கு இந்த காராமணி காய் பொரியல் செய்து பாருங்கள். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

காராமணி – 200 கிராம்

சாம்பார் வெங்காயம் – 100 கிராம்

கடுகு – சிறிதளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

கருவேப்பிலை – கைப்பிடி அளவு

தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் காராமணியை நன்கு சுத்தம் செய்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் இந்த காராமணியை அதில் போட்டு ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அந்த பாத்திரத்தில் வதக்கி வைத்திருக்கும் காராமணியை சேர்த்து மசாலாவையும் சேர்த்து 15 நிமிடம் விதமான தீயில் கிளற வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான காராமணி காய் பொரியல் தயார்.

Read Previous

தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாது உணவுகள்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பாகிஸ்தானின் தீவிர நடவடிக்கைகள்..!! போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular