
தினமும் வீட்டு சமையலறையில் சமைக்கும் பெண்களுக்கு தினமும் என்ன சமைப்பது என்பதே ஒரு பெரிய சவாலாக தான் உள்ளது. அந்த வகையில் இட்லி தோசைக்கு இந்த தக்காளி குருமா மட்டும் செஞ்சு பாருங்க வீட்ல எல்லாரும் இந்த குருமாவை அடிக்கடி செய்ய சொல்லி உங்ககிட்ட சொல்லுவாங்க. இந்த குருமா அவ்வளவு டேஸ்டா இருக்கும். தக்காளி குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி- 5
வெங்காயம்- 2
சோம்புத்தூள்-1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
தேங்காய்ப்பால் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு -தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தக்காளியை கட் செய்து கொதிக்க வைத்த நீரில் 5 நிமிடங்கள் போட்டு வதக்க வேண்டும். பின்பு தக்காளையில் உள்ள தோலை நீக்கிவிடவும். இதன் பிறகு தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து அது பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பிறகு மேலே கூறியவாறு அனைத்து மசாலாக்களையும் அதன் அளவுகளின் படி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் தேங்கா பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தலை தூவி இறக்கவும். இப்பொழுது சுவையான தக்காளி குருமா ரெடி.