
இந்த மாதிரி நம்பரில் இருந்து கால் வந்தா உஷாரா இருங்க. உடனே இந்த இலவச நம்பருக்கு புகார் அளிங்க.
தொலைத் தொடர்புத்துறை, தமிழ்நாடு LSA, மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஏர்டெல் தமிழ்நாடு ஆகியவற்றின் அதிகாரிகள் மத்திய உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சென்னை கிண்டியில் சந்தேகத்திற்கு உரிய இடத்தில் சோதனை செய்தனர். அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பை கண்டுபிடித்துள்ளனர்.
உரிமம் பெற்ற ILTO நெட்வொர்க்கை தவிர சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்ற சந்தாதாரர் அடையாளத் தொகுதி பெட்டிகள் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர் / எப்.டி.டி.எச் ரூட்டர் ஆகியவற்றை கொண்ட சட்டவிரோத தொலைதொடர்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகைய சட்ட விரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் அரசு கருவூலத்திற்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இது போன்ற சட்ட விரோத செயல்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏர்டெல் தமிழ்நாடு FIR பதிவு செய்துள்ளது.
உள்ளூர் சி.எல்.ஐ தனது தங்கள் தொலைபேசியில் எந்த எண்ணும் காட்டப்படாத சர்வதேச அழைப்பை பெறுவது குறித்து 1800 110 420 அல்லது 1963 என்ற கட்டணமில்லா எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.