பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளது.
ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்காலத்திலும் ஆளுமையிலும் பாரியளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் சில ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.இவ்வாறான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
பொதுவாகவே மேஷ ராசியினர் எதற்கும் அஞ்சாதவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசியை சேர்ந்த பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்கும் அதே நேரத்தில் பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள்.
சில நேரங்களில் இவர்களின் மன உறுதியும், விடா முயற்சியும் பிடிவாத குணம் போன்று தோற்றமளிக்கும்.
எந்த விடயத்தையும் விட்டுக்கொடுக்காது வெற்றியை அடைந்தே ஆக வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்த பெண்கள் பார்பதற்கு எளிமையாக இருக்க விரும்பும் அதே நேரம் மிகவும் உறுதியுடையவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிறந்த மனைவியாகவும் தோழியாகவும் இருப்பார்கள்.
உறவில் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள்.துணையிடம் உண்மையாக இருக்கும் இவர்கள் மற்றவர்களிடமும் அதனை எதிர்பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.
தங்களின் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்ற பண்பு இவர்களிடம் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்களிடம் இயற்கையாகவே தலைமைப் பண்பு காணப்படும். அன்புக்குரியவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தங்களுக்கு பிடித்தவர்ளின் விடயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள். செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் மிகவும் பிடிவாதமாக அதனை செய்தே முடிப்பார்கள்.
இவர்களின் இந்த குணமே பல நேரங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.