
இந்த வெயில் காலத்தில் பல பேருக்கு இந்த பிரச்சனை வரலாம்…!! உஷாரா இருங்க..!!
பொதுவாகவே வயிற்றுப்புண் பிரச்சினை என்பது ஒரு சிலருக்கு அடிக்கடி வரும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஆரோக்கியமான உணவுப் பழக்கமுறை இல்லாததுதான். குறிப்பாக வெயில் காலத்தில் அதிகமாக இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கும். ஏனென்றால் வெயில் காலத்தில் போதுமான அளவு நீரை அருந்தாதோ ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாததும் இந்த பிரச்சனைக்கு காரணமாகும். வயிற்றுப் புண் தான் நாளடைவில் அல்சர் ஆகிறது.
இந்தப் பிரச்சினையை மருத்துவரிடம் செல்லாமலே வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது. சாப்பிட தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம் சாப்பிட்ட பின்பு பத்து நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு தண்ணீர் மூலமும் இந்த வயிற்று புண்ணை சரி செய்ய முடியும். இரவில் தூங்குவதற்கு முன்பு சீரகம் ஒரு ஸ்பூன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இந்த நீரை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு குடித்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தினமும் மோர் அருந்துவதன் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். உணவில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முயலுங்கள். குறிப்பாக கீரை வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் இந்த பிரச்சனையை சரி செய்யலாம். மதிய நேரத்தில் மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடுங்கள் இது வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாக இருக்கும்.