இந்த 8 அறிகுறிகள் இருந்தால் பிறர் உங்களை வெறுக்கிறார்கள் என அர்த்தம்..!!

நாம் அனைவரும் பிறரால் எப்போதும் விரும்பப்படுவோம் என சொல்ல முடியாது, சில சமயங்களில் நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மை வெறுக்கக்கூடும் ஆனால் உண்மையில் யாராவது நம்மை வெறுக்கிறார்கள் என்பதை எப்படி அறிவது இந்த பதிவில் பிறர் உங்களை வெறுக்கிறார்கள் என்பதற்கான எட்டு முக்கிய அறிவுகளை விரிவாக பார்க்கலாம்..

நீங்கள் முன்பு அடிக்கடி பேசிக் கொண்டிருந்தேன் அவர்கள் திடீரென்று உங்களுடன் பேசுவதை தவிர்ப்பார்கள் உங்கள் அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார்கள் பொது நிகழ்வுகளில் உங்களை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை செய்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாகும்..

நீங்கள் யாரோ ஒருவரிடம் பேசும்போது அவர்களின் முகபாவனைகள் மற்றும் உடல் மொழியை கவனியுங்கள் அவர்கள் உங்களை பார்க்கும் போது முகம் சுழிப்பது கண்களை திருப்புவது உடலை விலக்கி நிற்கும் போன்ற நடவடிக்கைகள் அவர்கள் உங்களுடன் இருப்பதில் வசதியாக இல்லை என அர்த்தம்..

உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் உங்களுடன் தொடர்பு கொள்வதை குறைத்து இருந்தால் அது ஒரு எச்சரிக்கை சின்னமாக இருக்கலாம் உங்களின் பதிவு உங்களுக்கு லைக் செய்வது கமெண்ட் செய்வது போன்ற செயல்களை தவிக்கிறார்கள் என்றால் அது அவர்கள் உங்களுடன் தொடர்பை குறைக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம்..

நீங்கள் எதை செய்தாலும் உங்களை விமர்சிப்பது கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுகிறார்கள் அது அவர்கள் உங்களை வெறுக்கிறார்கள் என்பதற்காக ஒரு அறிகுறி, இந்த விமர்சனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் அது உங்கள் மனதை பாதிக்கக்கூடும்..

நீங்கள் உதவி கேட்ட போது அவர்கள் உதவி மறுப்பதோ அல்லது உதவி செய்ய மறுப்பதோ போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றால் அது அவர்கள் உங்களுடன் நான் நட்பாக இருக்க விரும்பவில்லை என்பதற்கான அறிகுறி..

நீங்கள் ஒரு குழுவில் இருக்கும் போது மற்றவர்கள் உங்கள் இருப்பையே கவனிக்காமல் இருப்பார்கள் என்றால் அது அவர்கள் உங்களை ஒதுக்கி வைக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி..

நீங்கள் யாரோ ஒருவரிடம் பேசும் போது அவர்கள் உங்கள் பேச்சை கவனிக்காமல் கேட்காமல் இருப்பார்கள் அல்லது பேச்சை மாற்றி விடுவார்கள் என்றால் அவர்களுக்கு உங்களுடன் பேச விருப்பமில்லை என்று அர்த்தம்..

நீங்கள் ஏதாவது ஒரு சாதனையை செய்தால் அவர்கள் அதைக் குறைத்து மதிப்பிடுவார்கள் அல்லது முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள் என்றால் அது அவர்கள் உங்கள் வெற்றியை பார்க்க பொறாமை படுகிறார்கள் என்பதற்கான ஒரு அறிகுறி பிறர் உங்களை வெறுக்கிறார்கள் என்ற எண்ணம் மிகவும் கஷ்டமானது ஆனால் இந்த உணர்வை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் இது உங்களது மனநிலையை சிறப்பாக வைத்திருக்கும்..!!

Read Previous

ஆசைப்பட்டதை அடைய வேண்டுமா அப்போ கொஞ்சம் உடம்பையும் கவனிங்க..!!

Read Next

கடுமையாக நடக்கும் பெற்றோர்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular