
காற்றின் வேகமாறுபாடு காரணமாக 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, தேனி, வேலூர், திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூந்தமல்லியில் 11 செ.மீ, செங்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.