
நாம் அனைவரும் பல ஊறுகாய் வகைகளை சுவைத்திருப்போம். தற்போது புது விதமாக இனிப்பு ஊறுகாயை சுவைக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கத்தான் இந்தப்பதிவு!
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கித் துருவிய இஞ்சி – 100 கிராம்
வெல்லம் – 150 கிராம்
புளி விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள், பெருங்காயம்- தலா கால் டீஸ்பூன் தாளிக்க
நல்லெண்ணெய் – 100 கிராம்
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். துருவிய இஞ்சியைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளி விழுது, வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துச் சுருள வதக்குங்கள். அல்வா பதம் வந்ததும் இறக்குங்கள். இனிப்பு ஊறுகாய் ரெடி!