• September 24, 2023

இனிப்பு போளி செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!

இனிப்பு போளி
தேவையானவை :

மைதா – 2 கப்

தேங்காய்த்துருவல் – 1 கப்

வெல்லம் பொடித்தது – 1 கப்

சுக்குப்பொடி – அரை டீஸ்பூன்

நெய் – 4 – 5 டீஸ்பூன் வரை

நல்லெண்ணை – 3 – 4 டீஸ்பூன் வரை

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.மைதா மாவுடன், உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துவைக்கவும்

2.அதன் மேல் சிறிது நல்லெண்ணையைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

3.வெல்லத்தில் கால் கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும்.

4.வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும்.

5.அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

6.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.வாழை இலைத்துண்டுடில் சிறிது எண்ணையைத் தடவி, அதில் பெரிய உருண்டை அளவு மாவை வைத்து தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.

Read Previous

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்திலேயே முதன்முறையாக 10008 ருத்ராட்சங்களால் ருத்ர நடராஜ விநாயகர் சிலை..!!

Read Next

கடலூர் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண் – மணமகன் வீட்டார்கள் கொந்தளிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular