தற்பொழுது உள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் தனது வேலைகளை அமர்ந்து கொண்டே பார்ப்பது போல் தான் உள்ளது .இதனால் தொப்பை எனது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வந்தது. ஒரே வாரத்தில் தொப்பையை குறைப்பதற்கான சில சூப்பர் டிரிக்ஸ் என்று எதுவென்று இப்பதிவில் காண்போம்.
சீரக தண்ணீர்
தொப்பையை குறைக்க சீரகத் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. முதல் நாள் இரவே சீரகத்தை நீரில் ஊறவைத்து சூடு பண்ணி குடிக்க வேண்டும்.
நெல்லிக்காயை ஊறவைத்த தண்ணீர்
முதல்நாள் இரவே நெல்லிக்காய் ஒரு டம்பலார் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். காலை அதனை நன்றாக வடிகட்டி குடிக்க தொப்பை குறைவது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
கருவேப்பிலை ஜூஸ்
தொப்பை கொழுப்பை குறைக்க கருவேப்பிலை ஜூஸ் பெரிதும் உதவுகிறது. தினமும் இதை மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வடிகட்டி குடித்து வர தொப்பை மளமளவென குறையும்.
முருங்கைக்கீரை சாறு
முருங்கைக்கீரை இலையை அரைச்சு நன்கு வடிகட்டி அந்த ஜூசை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர தொப்பை ஒரு வாரத்தில் குறைந்துவிடும்.