மலையாள நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் கேரள திரையுலகமே ஆடிப் போய் உள்ளது, நடிகர் சங்க பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர், இந்த நிலையில் இது குறித்த கருத்து தெரிவித்துள்ள நடிகர் மம்மூட்டி ஹேமா கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இனியும் கொடுமைகளை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களை மற்றும் நடிகர்களை உடனே கைது செய்து தண்டனை தரவேண்டும் என்றும், நீதிமன்றமே அதனை தீர்மானிக்கட்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் மலையாள நடிகைகளின் மீதான பாலியல் புகார்கள் அடுத்தடுத்த புகார்களையும் குற்றங்களையும் முன்வைத்து கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..!!