
ஆதார் கார்டு என்பது நமது இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் கார்டு பல்வேறு காரணங்களுக்காக நமக்கு தேவைப்படுகிறது. அதாவது, அரசு சார்ந்த வேலைகளுக்கு பதியவும், வங்கியில் ஏதேனும் பரிவார்த்தனை செய்யவும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாம் ஆதார் கார்டை பயன்படுத்துவோம். ஆனால் எல்லா இடங்களுக்கு இந்த ஆதார் கார்டை எடுத்த செல்ல முடியாது. அதற்கு மாற்றாக ஆதார் விர்ச்சுவல் ஐடி பயன்படுத்தலாம். இந்த விர்ச்சுவல் ஐடி என்பது ஆதார் கார்டில் உள்ள 16 இழக்க எண்ணின் தொடர்பு ஆகும்.
நாம் ஆதார் கார்டுக்கு பதிலாக விர்ச்சுவல் ஐடியை பல்வேரு விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த விர்ச்சுவல் ஐடியை வங்கி கணக்கு திறப்பதற்கும், அரசு சேவைகளுக்கும், இ-ஆதார் பதிவிறக்கம் செய்வதற்கும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கும் பயன்படுத்தலாம். இந்த விர்ச்சுவல் ஐடியை UIDAI என்ற அரசு இணையதளத்திற்கு சென்று, அந்த பக்கத்தின் கீழ் இருக்கும் “virtual id generator” என்பதை க்ளிக் செய்து, தங்களுடைய ஆதார் எண் மற்றும் captcha குறியீட்டை கொடுக்கவும், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் OTP போன்ற விவரங்களை கொடுத்த பின் விர்ச்சுவல் ஐடி தோன்றும். இதை நாம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பிக்கொள்ளலாம்.