இனி எத்தனை காலம் சேர்ந்திருப்போமோ?.. அருமையான மனம் தொட்ட பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

அப்பா வரும் வரை

அம்மாவால் இப்போதெல்லாம் பசியோடு காத்திருக்கமுடிவதில்லை

 

அவர் கூப்பிட்ட குரலுக்கு

சட்டென ஓடிப்போய்

நிற்க முடிவதுமில்லை

 

சமையலில்உப்பு புளி காரம் கச்சிதமாய் சேர்க்கமுடிவதில்லை

 

தாளிக்கையில் கடுகு, கடலைபருப்பினை ஏகத்திற்கு கருக்கிவிடுகிறாள்

 

எண்ணெய் பிசுக்குப் போக பாத்திரங்கள் கழுவ இயலவில்லை

 

எதையெடுத்தாலும் கைதவறிக் கீழே போடுகிறாள் அல்லது கொட்டிவிடுகிறாள்

 

சொல்கிற பத்து விஷயங்களில் ஒன்பதை மறந்து போகிறாள்

 

அப்பாவும் தன் பங்கிற்கு ஏகமாய் மாறிப்போய்விட்டார்

 

அம்மா சுடும் தீய்ந்துபோன தோசையை முகம் சுளிக்காமல் மூன்று சாப்பிடுகிறார்

 

அம்மா சத்தம் போடும்போது

ஏதும் பேசாமல்

செல்லப்பிராணியைப் போல அடங்கிப்போகிறார்

 

அம்மாவின் பித்த வெடிப்பு கால்களுக்கு களிம்பு பூசிவிடுகிறார்

 

இறுகிப்போன கால் பெருவிரல்

நகங்களை வெட்டிவிடுகிறார்

 

பேரப்பிள்ளைகளிடம் விட்டுக்கொடுக்காமல்

அம்மாவிற்காய் பரிந்து பேசுகிறார்

 

என்ன ஆயிற்று இவருக்கு?

காலங்கடந்து அம்மாவிடம் எது இவரை ஈர்க்கிறது?

 

எப்போதும் நம்மோடு தான் என்கிற எண்ணம்

இனி எத்தனை காலம் சேர்ந்திருப்போமோ?

என்பதாய் மாறும் போது தான்

அடைத்திருந்த அன்பின் ஊற்றினை காலம் தன் விரல்களால் திறந்துவிடும் போலும்..

 

 

Read Previous

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

நச்சுன்னு 4 பாயிண்ட்.. ஆண்மை குறைவு பற்றி கவலையே வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular