நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, தற்போது புதுச்சேரி மாநிலங்களவையில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரியில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். இதில் இவர் சுமார் 12700 கோடி ரூபாய் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிலர் வீடுகளில் மாடித்தோட்டம் வைத்து செடி கொடிகளை வளர்த்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து அனைவரின் வீட்டிலும் மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என கருதி முதலமைச்சர் ரங்கசாமி மாடித்தோட்டம் வைப்பதற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு 5000 ருபாய் மானியமாக கொடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதேபோல், மேலும் பல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்து வருகிறார் முதலமைச்சர் ரங்கசாமி.