இனி மூன்று நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

பொதுவாக தமிழக மின்சார வாரியத்தில் இருந்து மின் இணைப்பு பெற நுகர்வோர் விண்ணப்பித்து பல நாட்களுக்குப் பிறகு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதனால்  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை பரிசீலனை செய்த தமிழக மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி இனி புது மின் இணைப்புகள் வழங்க அதிகபட்சமாக மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. வீடு, கடைகள் உள்ளடங்கிய குறைந்த மின் அழுத்த  பிரிவில் மின்மாற்றி அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் ஏழு நாட்களுக்குள் மின்விநியோகம் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு தேர்தல் முடிந்த நிலையில் இந்த மாதம் நடைமுறைக்கு வருகின்றது.

 

Read Previous

விராட் கோலிக்கு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் – மிஸ்பா உல் ஹக் பாராட்டு..!!

Read Next

Central Bank of India-ல் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு.!! சம்பளம் Rs.20000..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular