இந்தியா முழுவதும் அரிசி மற்றும் கோதுமையின் கொள்முதல் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை விற்பனை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரிசி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ரேஷன் கடைகள் மூலம் வெள்ளை அரிசி வழங்க வேண்டும். அரசு கூட்டுறவு நுகர்வோர் வலையமைப்பு (கான்பெட்) மூலம் வெள்ளை அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். இன்னும் சில மாதங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.