தமிழகத்தில் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் மயமாக மாறுகிறது டாஸ்மாக் கடைகள்..
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது, முதல் கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள 266 டாஸ்மாக் கடைகள் பார் கோடு மூலமாக ஸ்கேன் செய்து பில் அளிக்கப்பட உள்ளது, மேலும் மதுபாட்டிலின் விற்பனைகளின் கூடுதல் விலைகளை தடுப்பதற்காகவும் மது பிரியர்களுக்கு மதுவின் விலை அறிவதற்காகவும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது, டாஸ்மாக் கடைகளுக்கு இணையதள வசதிகள் செய்து தருவதற்காக மத்திய அரசின் ரயில் டெல் ஒப்பந்தம் அளித்துள்ளது, ரூ 294 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இணையதள வசதியின் வேலை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, மேலும் மது பிரியர்களுக்கு இனி கவலையே இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது கண்டு மது பிரியர்கள் பழைய தளத்தில் தமிழக அரசை வாழ்த்தி வருகிறது..!!